தான்தோன்றிமலையில் ரூ.6.85 கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணி
தான்தோன்றிமலையில் ரூ.6.85 கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணி
ADDED : மார் 05, 2026 07:12 AM
கரூர்:கரூர் தான்தோன்றிமலையில், 6.85 கோடி ரூபாய் மதிப்பீட்டி-லான, 41 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம் சரவணா நகரில், 9.90 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை மேம்படுத்தும் பணி, ராம்ஜி கார்டனில், 4.78 லட்சம் ரூபாயில் தார்ச்சாலை மேம்ப-டுத்தும் பணி, ஸ்ருதி மஹால் பகுதியில், 20.89 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை மேம்படுத்தும் பணி, அம்மன் நகரில், 12.01 லட்சம் மதிப்பில், 2 தார் சாலைகள் மேம்படுத்தும் பணி, முத்து நகரில், 9.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி, ஆஸ்கார் கார்டனில், 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் ஆத்துார் புதுாரில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, மருத்துவர் நகரில் 23.57 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சிமென்ட் சாலை அமை பணி, அமிர்தாம்பாள் நகர் 1,2,3 மற்றும் 4வது தெருக்களில், 1.04 கோடி மதிப்பீட்டில், 5 புதிய கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி, திருமால் நகர், 1,2,3 மற்றும் 4 வது தெருக்களில், 41.81 லட்சம் ரூபாய் மதிப்பில், 4 புதிய கழிவுநீர் வடிகால்கள் அமைக்கும் பணி.
மற்றும் சுந்தர் நகர் 1,2 மற்றும், 3 வது தெருக்களில், 93.92 லட்சம் ரூபாய் மதிப்பில் 3 புதிய கழிவுநீர் வடிகால்கள் அமைக்கும் பணி, ராமக்கவுண்டன் புதுார், தமிழ்நகர் மற்றும் தில்லைநகர் பகுதிகளில், 1.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கழி-வுநீர் வடிகால்கள் அமைக்கும் பணி என மொத்தம், 6.85 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, 41 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., விமல்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோத், சுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
