ADDED : ஜூன் 19, 2025 01:52 AM
கரூர் மாநகராட்சி பகுதிகளில், 5.80 கோடி ரூபாயில், 21 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி, இன்று தொடங்கி வைக்கிறார்.
கரூர், 17 வது வார்டு கிருஷ்ணாநகரில் தார்ச்சாலை, அருணாசலம் நகரில் தார்ச்சாலை மற்றும் மழைநீர் வடிகால் கட்டுமான பணி, 19வது வார்டு சங்கர் நகரில் தார்ச்சாலை, மழைநீர் வடிகால் கட்டுமான பணி, கொளந்தனுாரில் புதிய அங்கன்வாடி கட்டுமான பணி, 1வது வார்டு கோதுாரில் மற்றும் சின்ன கோதுாரில் சாலை பணி, அரிக்காரபாளையத்தில் தார்ச்சாலை, கோதை நகர் முதல் கோதுார் மேற்கு வரை சாலை பணி, கே.பி.நகரில் சாலை அமைக்கும் பணி.
மற்றும் 28வது வார்டு வடிவேல் நகரில் தார்ச்சாலை, வடிகால் கட்டுமான பணி, 26வது வார்டு திருநகரில் சாலை அமைக்கும் பணி, 46வது வார்டு வசந்தம் நகரில் சிறுபாலம் பணி உள்பட, 21 பணிகளை எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தொடங்கி வைக்கிறார்.