அய்யர்மலை ரோப் கார் 2 மாதமாக நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் பாதிப்பு
அய்யர்மலை ரோப் கார் 2 மாதமாக நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 31, 2026 05:36 AM

குளித்தலை:அய்யர்மலையில்
உள்ள ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், கடந்த இரண்டு மாதங்களாக
ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குளித்தலை
அடுத்த அய்யர்மலையில், பிரசித்தி பெற்ற சிவாலயமான சுரும்பார் குழலி
உடனுறை ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. தரைத்தளத்தில் இருந்து,
1,178 அடி உயரத்தில், 1,017 படிகள் கொண்ட மலை உச்சியில்,
ரத்தினகிரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
கடந்த
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் பங்களிப்பு மற்றும் அரசு நிதி
உதவியுடன் ரூ.9.10 கோடி மதிப்பில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின், ரோப்
கார் சேவையை பொதுமக்கள், பக்தர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
ஒருவருக்கு மலை ஏறி வருவதற்கு, 100 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
இதையடுத்து ரோப்கார் மூலம் குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள்,
மாற்றுத்திறனாளிகள் சுவாமியை எளிதில் தரிசனம் செய்து வந்தனர்.
கோவிலுக்கு வருமானமும் வந்தது. மேலும் ரோப் கார் அமைக்கப்பட்டதால்,
சுற்றுலா பயணிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு வருவது
அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக,
பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக
பராமரிப்பு பணி ஒரு மாதத்தில் முடிந்து, ரோப்கார் சேவை மீண்டும்
துவங்கி விடுவது வழக்கம். இந்நிலையில் பல்வேறு இடங்களில் இருந்து
வரும் பக்தர்கள், ரோப்கார் வசதியின்றி ஏமாற்றத்துடன் திரும்பி
செல்கின்றனர்.
எனவே, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்,
கோவிலை பார்வையிட்டு ரோப்கார் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை
எடுக்க வேண்டும் என பக்தர்கள், சிவனடியார்கள், கோவில்
குடிபாட்டுக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
