/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
/
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
ADDED : ஆக 05, 2025 12:55 AM
கிருஷ்ணராயபுரம் மேட்டு மகாதானபுரம், மகாலட்சுமி அம்மன் கோவில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டுமகாதானபுரத்தில் மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழாவுக்கு மறுநாள், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்வது வழக்கம். இந்தாண்டு நேற்று காலை, 10:00 மணிக்கு கோவில் முன் உள்ள கொடிமரத்தில் தீபம் ஏற்றப்பட்டது. பின் பரம்பரை பூசாரி பெரிய சாமி தலைமையில், மகாலட்சுமி அம்மன் கோவில் பிரகாரத்தில், தேங்காய் உடைக்கும் பக்தர்கள் அமர வைக்கப்பட்டனர்.
முதலில் சக்தி தேங்காய் என குறிக்கும் வகையில், ஏழு பேர் தலையில் பூசாரி பெரியசாமி தேங்காய் உடைத்தார். பின் கோவில் வளாகம் முன், 400 க்கும் மேற்பட்ட பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது.
பின் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி மகாலட்சுமி அம்மனை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் கர்நாடாக மாநிலம் பெங்களூரு, மைசூரு மற்றும் கிருஷ்ணகிரி, சேலம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திண்டுக்கல், பழனி, கரூர், ஈரோடு, கோவை, திருச்சி, வேடசந்துார் மற்றும் உள்ளூர்
பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தபோது, சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு பஞ்சப்பட்டி வட்டார மருத்துவ குழு சார்பில், டாக்டர் பார்த்திபன் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.