/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்
/
பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்
ADDED : மே 15, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம் :சிந்தலவாடி, மாரியம்மன் கோவில் திருவிழாவை
முன்னிட்டு, மேல சிந்தலவாடி பகுதியில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை மேல சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் புனித காவிரி நீர் மற்றும் பால்குடம் எடுத்து கரூர் - திருச்சி நெடுஞ்சாலை வழியாக லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை வந்து கோவிலுக்கு சென்றனர். தினமும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து சென்று, மாரியம்மனுக்கு ஊற்றி சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.