/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகா மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
/
மகா மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
ADDED : மார் 31, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த சிவாயம் பஞ்சாயத்து, வேலாங்காட்டுப்பட்-டியில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்-குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக சென்றனர்.
இறுதியாக, வேலாங்காட்டுப்பட்டி மகா மாரியம்மன் கோவிலை அடைந்தனர். பின், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்-டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்க-ளுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.