ADDED : ஆக 25, 2025 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை,: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., பணிக்கம்பட்டி இந்-திரா காலனியில் மாரியம்மன், காளியம்மன், கருப்பண்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழாவை-யொட்டி, மருதுார் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்த பக்-தர்கள், மேளதாளம் முழங்க முக்கிய வீதி வழியாக ஊர்வமாக சென்றனர்.
தொடர்ந்து, சுவாமிக்கு தீர்த்தத்தை ஊற்றி சிறப்பு அபி-ஷேகம் செய்தனர். இரவு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனர். இன்று காலை, கிடா வெட்டுதல், மதியம், அக்னி சட்டி, அலகுகுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, மாவிளக்கு பூஜை நடக்கிறது. மறுநாள் காலை, மஞ்சள் நீராட்டு விழா, கரகம் எடுத்து விடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.