/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சங்கரமலைப்பட்டி சிவன் கோவில் கலசம் திருட்டு; பக்தர்கள் அதிர்ச்சி
/
சங்கரமலைப்பட்டி சிவன் கோவில் கலசம் திருட்டு; பக்தர்கள் அதிர்ச்சி
சங்கரமலைப்பட்டி சிவன் கோவில் கலசம் திருட்டு; பக்தர்கள் அதிர்ச்சி
சங்கரமலைப்பட்டி சிவன் கோவில் கலசம் திருட்டு; பக்தர்கள் அதிர்ச்சி
ADDED : டிச 17, 2025 07:49 AM

கிருஷ்ணராயபுரம்: சங்கரமலைப்பட்டி, சங்கரேஸ்வரர் சிவன் கோவிலில் கோபுர கலசம் திருட்டு போனது.கிருஷ்ணராயபுரம் அடுத்த சங்கரமலைப்பட்டி பகுதியில், சங்க-ரேஸ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்-தினம் கோவில் கோபுரத்தில் உள்ள, கலசத்தை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் திருடி சென்றது தெரிய வந்தது. கலசம் திருட்டு போனது குறித்து, கோவில் செயல் அலுவலர் மாயனுார் போலீசில் புகார் அளித்தார். பழமையான சிவன் கோவில் கலசம் என்பதால், விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது. கலசம் திருட்டால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழைய ஜெயங்கொண்டம் மலை-யாளி சுவாமி கோவில் உள்ளது. இதன் கோபுர கலசத்தை எடுத்து சென்ற மர்ம நபர்கள், வெளியே கொண்டு செல்ல முடியாமல் கோவில் வளாகத்தில் வைத்து விட்டு தப்பினர்.
இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்-றனர்.