ADDED : ஏப் 26, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
குளித்தலை, குளித்தலை அடுத்த தோகைமலை, ஆர்.ஐ., மற்றும் வி.ஏ.ஓ அலுவலகம் அருகே, மூன்று தலைமுறைகளுக்கு முன், மாவடியா என்பவரால் கட்டப்பட்ட பழமையான விநாயகர் கோவில் உள்ளது. அப்பகுதியினர் கோவிலை பராமரித்து வந்ததால், ஏழை பிள்ளையார் கோவில் என அழைக்கப்படுகிறது.
கோவிலில் நேற்று காலை பக்தர்கள் சாமி கும்பிட சென்ற போது, விநாயர்கள் சிலை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இத்தகவல் தோகைமலை பகுதியில் பரவியதால் கோவிலுக்கு அப்பகுதியினர் திரண்டு வந்தனர். பக்தர்கள் சார்பில் மூர்த்தி, சிவராமன் ஆகியோர், தோகைமலை எஸ்.ஐ. பாலசுப்பிரமணியிடம் புகார் கொடுத்தனர். சிலையை எடுத்து சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
