/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவில் திருவிழா நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
/
மாரியம்மன் கோவில் திருவிழா நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
மாரியம்மன் கோவில் திருவிழா நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
மாரியம்மன் கோவில் திருவிழா நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
ADDED : ஏப் 30, 2025 01:07 AM
குளித்தலை:
குளித்தலை அருகே, மேலமேட்டில் மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குளித்தலை அடுத்த, கள்ளை பஞ்., மேலமேட்டில் விநாயகர், மாரியம்மன், பாம்பாலம்மன், கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் கிடா வெட்டுதல், பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், 1,018 அலகு குத்துதல், வாகனத்தில் தொங்கியபடி பக்தர்கள் அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியாக, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாக்குழு சார்பில் நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை கரகம் எடுத்து விடல் நிகழ்ச்சி, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.