/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தாயை தள்ளி விட்டு கொலையா? மகனிடம் போலீசார் விசாரணை
/
தாயை தள்ளி விட்டு கொலையா? மகனிடம் போலீசார் விசாரணை
தாயை தள்ளி விட்டு கொலையா? மகனிடம் போலீசார் விசாரணை
தாயை தள்ளி விட்டு கொலையா? மகனிடம் போலீசார் விசாரணை
ADDED : ஆக 09, 2025 02:01 AM
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, மது குடிக்க பணம் தராத தாயை, தள்ளி விட்டு கொலை செய்தாரா என்ற கோணத்தில், மகனை கைது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி தழுவம்பாளையம் பகுதியை சேர்ந்த மணி, 52; இவர், கரூர் மாவட் டம், நொய்யல் குறுக்கு சாலை பங்களா தெருவில் மனைவி அமராவதி, 45; மகன் தினேஷ் குமார், 25; ஆகியோருடன் தங்கி இருந்து தறி பட்டரையில் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தினேஷ் குமார் மது குடிக்க, தாய் அமராவதியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், பணம் தர அமராவதி மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தினேஷ் குமார், தாய் அமராவதியை அடித்து உதைத்து, கீழே தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
நேற்று, அமராவதி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. தலையில் படுகாயமடைந்து இறந்து கிடந்துள்ளார். புகார்படி வந்த, வேலாயுதம்பாளையம் போலீசார் அமராவதி உடலை கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினேஷ் குமார் தள்ளி விட்டதில் அமராவதி இறந்தாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என, தினேஷ் குமாரை கைது செய்து, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.