/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குண்டும், குழியுமான தார்ச்சாலையால் சிரமம்
/
குண்டும், குழியுமான தார்ச்சாலையால் சிரமம்
ADDED : மார் 29, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர்
கவுரிபுரம் பகுதியில், வர்த்தக நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் மற்றும்
வீடுகள் அதிகளவில் உள்ளன.
இந்நிலையில், அந்த பகுதியில், தார்ச்சாலை பல
மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக நாள்தோறும், ஏராளமான
வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளது. மேலும், கரூரை சுற்றியுள்ள பல்வேறு
கிராமங்களில் இருந்து, டூவீலர்களில் ஏராளமான பொதுமக்கள், வேலைக்கு
செல்கின்றனர். அப்போது, இரவு நேரத்தில் குண்டும், குழியுமான சாலைகளில்
சிக்கி பொதுமக்கள் படுகாயமடைகின்றனர். இதனால், கவுரிபுரம் பகுதியில் உள்ள,
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்.

