/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெரூர் வாய்க்கால் தூர்வார டி.என்.பி.எல்., நிறுவனம் ரூ.1லட்சம் நிதி வழங்கல்
/
நெரூர் வாய்க்கால் தூர்வார டி.என்.பி.எல்., நிறுவனம் ரூ.1லட்சம் நிதி வழங்கல்
நெரூர் வாய்க்கால் தூர்வார டி.என்.பி.எல்., நிறுவனம் ரூ.1லட்சம் நிதி வழங்கல்
நெரூர் வாய்க்கால் தூர்வார டி.என்.பி.எல்., நிறுவனம் ரூ.1லட்சம் நிதி வழங்கல்
ADDED : ஜூலை 22, 2011 11:59 PM
வேலாயுதம்பாளையம்: நெரூர் வாய்க்கால் பாசன சங்கத்துக்கு வாய்க்கால் தூர் வாரும் பணிக்காக ஒரு லட்சம் ரூபாயை டி.என்.பி.எல்., நிறுவனம் வழங்கியது.
கரூர் மாவட்டம் நெரூர் பாசன வாய்க்கால் மூலம் கரூர் மாவட்டத்தில் நன்னியூர் முதல் திருக்கூடலூர் வரை செவ்வந்திபாளையம், வாங்கல், ஒடையூர், முனியப்பனூர், மல்லம்பாளையம், சேனப்பாடி, பெரியகாளிபாளையம், கவுண்டன்புதூர், சின்னகாளிப்பாளையம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வாய்க்கால் பாசனம் செய்து வருகின்றனர். நெரூர் ராஜவாய்க்கால் - மேலவாய்க்கால் மூலம் நெரூர், தென்பாகம் கிராமத்தில் கட்டுக்கலம், ஒத்தையூர், வேடிச்சிபாளையம், தன்னாசிகவுண்டன்புதூர், ரெங்கமேட்டுகலம், எழுத்துப்பாறை, கல்லுப்பாளையம், காளியப்பகவுண்டன்புதூர் கிராமங்களும், கீழவாய்க்கால் மூலம் அக்ரஹாரம், மரவாபாளையம், புதுத்தெரு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 5,000 ஏக்கரில் பாசனம் செய்து வருகின்றனர். இரண்டு வாய்க்காலில் மொத்த நீளமான 16 கி.மீ., தூரத்துக்கு தூர்வாரும் பணிக்காக, நெரூர் வாய்க்கால் பாசன சங்க விவசாயிகள் சபை சார்பில், நிதியுதவி கேட்டு டி.என்.பி.எல்., நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து டி.என்.பி.எல்., சார்பில், ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது. நிதி வழங்கும் விழாவில், காகித நிறுவன முதன்மை பொது மேலாளர் (இயக்கம்) மணி, சங்க உதவி செயலாளர் நண்பன், சங்கப்பொருளாளர் கனகசபாபதி, காகித ஆலை துணை பொதுமேலாளர் பட்டாபிராமன் முன்னிலையில், நெரூர் வாய்க்கால் பாசன சங்க தலைவர் தன்னப்பனிடம் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.