நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலாயுதம்பாளையம்: கரூர் ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்
பரமக்குடி துப்பாக்கி சூடு கண்டித்து வேலாயுதம்பாளையம் வி.ஏ.ஓ அலுவலகம்
முன்பு ஒன்றிய தலைவர் குணசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் கடந்த செப்டம்பர் 11 ம் தேதி பரமக்குடியில் நடந்த
துப்பாக்கி சூட்டில் 7 பேர் இறந்ததை கண்டித்தும், செப்டம்பர் 16 ம் தேதி
சேலத்தில் மூடப்பட்ட சூப்பர் ஸ்பெஷல் மருத்துவமனையை திறக்ககோரி போராட்டம்
நடத்திய வாலிபர் சங்கத்தின் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும் கோஷங்கள்
எழுப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் முத்துச்செல்வன், மாவட்ட தலைவர்
சரவணன், செயலாளர் ஜெயவீரன், பொருளாளர் ராஜா, விவசாய ஒன்றிய செயலாளர்
முருகேசன்,மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் சண்முகம், மாதர் சங்க செயலாளர்
அன்ன காமாட்சி உள்பட பலர் பங்கேற்றனர்.