/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'பள்ளப்பட்டியில் இருந்து நேரடி பஸ்களை மீண்டும் இயக்கணும்'
/
'பள்ளப்பட்டியில் இருந்து நேரடி பஸ்களை மீண்டும் இயக்கணும்'
'பள்ளப்பட்டியில் இருந்து நேரடி பஸ்களை மீண்டும் இயக்கணும்'
'பள்ளப்பட்டியில் இருந்து நேரடி பஸ்களை மீண்டும் இயக்கணும்'
ADDED : ஜன 22, 2025 07:15 AM
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலைக்கு செல்வோர் நுாற்றுக்கணக்கில் உள்ளனர். இவர்கள், அதிகாலையில் பள்ளப்பட்டியில் இருந்து கோயம்புத்துார், ஈரோடு, ஏற்காடு, திருப்பூர், ஏர்வாடி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பஸ்களில் சென்று வந்தனர்.
இந்நிலையில், பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன், நேரடி பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால், பொங்கல் முடிந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். தற்போது வரை பஸ்கள் இயக்கப்படாமல் இருப்பதால், வெளியூர் செல்லும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் வேலைக்கு செல்வோர், மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்து, விரைவில் நேரடி பஸ்களை மீண்டும் இயக்க பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.