/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஸ் ஸ்டாண்டில் நோய் பரப்பும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
/
பஸ் ஸ்டாண்டில் நோய் பரப்பும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
பஸ் ஸ்டாண்டில் நோய் பரப்பும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
பஸ் ஸ்டாண்டில் நோய் பரப்பும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
ADDED : மே 12, 2024 12:10 PM
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில், பல மாதங்களாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் தொற்றுநோய் பரப்பும் வகையில் சேதமடைந்த நிலையில் உள்ளது.
கரூர் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நலனுக்காக, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வைக்கப்பட்டது. அதன் மூலம், பயணிகளுக்கு நல்ல குடிநீர் கிடைத்தது. தற்போது, சுத்திகரிப்பு இயந்திரம் பல மாதங்களாக நோய் பரப்பும் வகையில், சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. சுத்திகரிப்பு இயந்திரத்தில் உள்ள குழாய்கள் பழுதடைந்துள்ளன. அதை, மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது.
மேலும் கடந்த, 2021 ல் தி.மு.க., ஆட்சி ஏற்பட்டதால், கரூர் பஸ் ஸ்டாண்டில் அம்மா குடிநீர் நிலையமும் மூடப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள, கடைகளில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை, 20 முதல், 25 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்குகின்றனர். எனவே, கரூர் பஸ் ஸ்டாண்டில் சேதம் அடைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சரி செய்து, துாய்மையான முறையில் வைத்திருக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.