/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்ட பா.ஜ.,- ஐ.டி., விங் தலைவர் கைது
/
மாவட்ட பா.ஜ.,- ஐ.டி., விங் தலைவர் கைது
ADDED : ஜூலை 02, 2025 02:22 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, முத்து
காளிப்பட்டியை சேர்ந்த பிரவீன்ராஜ் பா.ஜ.,- ஐ.டி., விங் தலைவராக உள்ளார். இவர், தனது 'சங்கி பிரின்ஸ்' என்ற 'எக்ஸ்' தள பக்கத்தில், கடந்த ஏப்.,25ல், தனியார் 'டிவி'யில் ஒளிபரப்பான செய்தியை டேக் செய்து, ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தாக்கி, தகவல் பதிவிட்டுள்ளார். இது குறித்து வந்த புகாரின்படி, நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த பிரவீன்ராஜை, நேற்று போலீசார் கைது செய்து,
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 'பொதுமக்கள் சமூக வலைதளத்தில், ஜாதி, மத உணர்வுகளை துாண்டி, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில், கருத்துகளை வெளியிடக் கூடாது' என, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் எச்சரித்துள்ளார்.