ஓட்டளிக்க 12 மாற்று ஆவணங்கள்மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
ஓட்டளிக்க 12 மாற்று ஆவணங்கள்மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
ADDED : ஏப் 21, 2026 05:16 AM
கரூர் :: வாக்காளர் அட்டை இல்லை எனில், ஓட்டளிக்க 12 மாற்று ஆவணங்கள் பயன்படுத்தி ஓட்டு போடலாம் என, மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிகுமார் தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டசபை தேர்தல் வரும், 23ல் நடக்கிறது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க
வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. அதன்படி, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, தபால் கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பிட்டு அட்டை, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறன் அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்; வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையிலுள்ள அச்சுப்பிழைகள், எழுத்துப் பிழைகள் முதலியவற்றை பொருட்படுத்த தேவையில்லை. மற்றொரு சட்டசபை தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்டுள்ள வாக்களார் புகைப்பட அடையாள அட்டையை, வாக்காளர் ஒருவர் அளிப்பாராயின், அந்த வாக்காளர் வாக்களிப்பதற்காக வந்துள்ள ஓட்டுச்சாவடியில் வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் இடம் பெற்றிருக்குமாயின், அத்தகைய வாக்காளர் புகைப்பட அட்டைகளையும் ஏற்றுக்
கொள்ளலாம்.
இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.
