22 ஓட்டுச்சாவடிகளுக்கு வண்ண குறியீடு மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
22 ஓட்டுச்சாவடிகளுக்கு வண்ண குறியீடு மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
ADDED : ஏப் 23, 2026 03:42 AM

கரூர்:''வாக்காளர்கள்
எவ்வித சிரமமுன்றி ஓட்டுச்சாவடிகளுக்கு சென்றடைய, 22
ஓட்டுச்சாவடிகளுக்கு வண்ண குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளது,''
என, மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிகுமார் தெரிவித்தார்.
கரூர்
தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து,
ஓட்டுச்சாவடி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும்
பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிகுமார் பார்வையிட்டார்.
அப்போது,
அவர் கூறியதாவது: ஓட்டுப்பதிவு பணிகளில் ஈடுபடவுள்ள
அலுவலர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும்
ஓட்டுப்பதிவு அமைதியாக நடக்க பாதுகாப்பு பணிக்காக, 2,400 போலீசார்
மற்றும் 6 கம்பெனி மத்திய பாதுகாப்பு ஆயுத படையினர்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும்
வேட்பாளர் பெயர், சின்னத்துடன் கூடிய போஸ்டர்களை வாக்காளர்களின்
பார்வைக்கு தெரியும் வகையில் ஒட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்,
4 தொகுதிகளிலும் தலா 1 மாதிரி ஓட்டுச்சாவடி, தலா 1 அனைத்து மகளிர்
ஓட்டுச்சாவடி, தலா 1 பசுமை ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் எவ்வித சிரமம் இன்றி ஓட்டுச்சாவடிகளுக்கு சென்றடைய
அரவக்குறிச்சி தொகுதியில் 42, 43, 46, 47, 48, 49, 50 ஆகிய 7
ஓட்டுச்சாவடிகளுக்கும், கரூர் தொகுதியில் 177, 178, 179, 181, 274,
275, 276, 277 என 8 ஓட்டுச்சாவடிகளுக்கும், குளித்தலை தொகுதியில்
47, 48, 49, 50, 51, 52, 53 ஆகிய 7 ஓட்டுச் சாவடிகளுக்கும் என மொத்தம்,
22 ஓட்டுச்சாவடிகளுக்கு வண்ணக் குறியீடுகள்
வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
