/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்
/
மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்
மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்
மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்
ADDED : ஜன 07, 2024 11:06 AM
கரூர்: கரூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், மாவட்ட சுகாதார பேரவை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
அதில், சுகாதார பேரவையை குத்து விளக்கேற்றி, தொடங்கி வைத்து கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:
கரூர் மாவட்டத்தில் கடந்த ஆக., 23 முதல் வட்டாரம் வாரியாக, தொடர்ச்சியாக சுகாதார பேரவை நடத்தப்பட்டு, கடந்த மாதம், 22ல் நிறைவு பெற்றது.
அதில், 315 கருத்துருவில், 18 கருத்துருக்கள் வட்டார அளவிலும், 101 கருத்துருக்கள் மாவட்ட அளவிலும், 195 கருத்துருக்கள் மாநில சுகாதார பேரவையில் வைத்து, தீர்வு ஏற்படுத்தி கொள்ள தீர்மானிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. அதேபோல் மருத்துவ துறை சார்பில், பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., க்கள் மாணிக்கம், இளங்கோ, டி.ஆர்.ஓ., கண்ணன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் ரமாமணி, துணை இயக்குனர் சந்தோஷ் குமார், கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், நகராட்சி தலைவர்கள் குணசேகரன், முனவர் ஜான் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக சுகாதாரத்துறை சார்பில், கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.