ADDED : நவ 26, 2025 02:32 AM
கரூர், டிச., 6ல், மாவட்ட அளவில் பல்வேறு விதமான கலை போட்டிகள் நடக்கவுள்ளன.
கரூர் செங்குந்தபுரம், 6வது கிராஸ் மார்னிங் ஸ்டார் உயர்நிலைப் பள்ளியில், மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், 5 முதல், 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு வார விடுமுறை நாட்களான சனிக்கிழமை மாலை, 4:00 மணி முதல், 5:00 வரையும், ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை குரலிசை, பரத நாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே, சிலம்பம் போன்ற கலைப்பயிற்சிகள் அளிக்கப்படும்.
மேலும் மாவட்ட அளவில் 5--8, 9--12, 13--16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு, பரத நாட்டியம், கிராமிய நடனம் (நாட்டுப்புற கலை), குரலிசை, ஓவியம் ஆகிய கலை போட்டிகள் வரும் டிச., 6ல் நடத்தப்படும். அதில் முதலிடம். இரண்டாமிடம், மூன்றாமிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். வயது சான்றிதழ் மற்றும் பள்ளி படிப்பு சான்றிதழ்களுடன் டிச.,6ம் தேதி காலை 9:00 மணிக்கு வர வேண்டும்.இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

