/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி
/
மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி
ADDED : நவ 15, 2024 02:09 AM
மாவட்ட அளவிலான
கலை திருவிழா போட்டி
கரூர், நவ. 15-
கரூர் மாவட்டத்தில், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டி, கடந்த ஆகஸ்ட் முதல் நடந்து வருகிறது. மாறுவேடம், பாடல், நடனம், ஓவியம், கதை கூறுதல் உட்பட பல்வேறு போட்டிகளில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பள்ளி அளவில், வட்டார அளவிலான போட்டிகள் நடந்து, ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் மாணவர்கள் மாவட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்-டனர். இதன்படி, கரூர் அருகில் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான போட்டி நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெறுவோர் மாநில அளவில் நடைபெற உள்ள, போட்டிகளில் பங்-கேற்க உள்ளனர்.