ADDED : மார் 11, 2026 08:51 AM
குளித்தலை:குளித்தலை அடுத்த நாகனுாரில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.
நாகனூர்
விளையாட்டு மைதானத்தில், இரண்டு நாட்கள் நடந்த போட்டியில் திருச்சி,
திண்டுக்கல், கரூர் மாவட்டங்களிலிருந்து, 24 அணிகள் விளையாடின.
இறுதி போட்டியில் நாகனுார் தி.மு.க., பாய்ஸ் கிரிக்கெட் அணியினரும்,
கழுகூர் ஊராட்சி அ.உடையாபட்டி கிரிக்கெட் குழு அணியினரும் மோதினர்.
இதில், நாகனுார் தி.மு.க., அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இந்த அணிக்கு
முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டது. 2வது பரிசு பெற்ற
அ.உடையாபட்டி கிரிக்கெட் அணிக்கு, ரூ. 20 ஆயிரம், மாகாளிபட்டி
கிரிக்கெட் கிளப் அணிக்கு, 3வது பரிசாக ரூ.10 ஆயிரம், 4 பரிசாக
கரும்புளிபட்டி சி.சி., அணி ரூ.7,000 பெற்றது. மேலும் சிறந்த
பேட்ஸ்மேன், சிறந்த கேச்சர், சிறந்த பவுலர் என சிறப்பு பரிசு
வழங்கப்பட்டது.
