அரவக்குறிச்சி விவசாயிகளுக்கு மாவட்ட அள-விலான பயிற்சி
அரவக்குறிச்சி விவசாயிகளுக்கு மாவட்ட அள-விலான பயிற்சி
ADDED : பிப் 17, 2026 06:22 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி வட்டார விவசாயிகளுக்கு, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம், ஜெயின் சொட்டு நிறுவனம், வாணவராயர் வேளாண் கல்லுாரி ஆகிய இடங்களில் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு சொட்டு நீர் அவசியம், நீர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. புதியதாக நடைமுறையில் பயன்படுத்தி வரும் வேளாண் பண்ணை கருவிகள் மற்றும் இயந்தி-ரங்கள் குறித்து உதவி பொறியாளர் டாக்டர்.ஆர்த்தி, டாக்டர் கதிரவன் ஆகியோர் விளக்கம் அளித்து பேசினர். சொட்டுநீர் பாசனம் மூலம் மா, தென்னை, வாழை, கரும்பு மற்றும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர் சாகு-படி செய்துள்ள செயல் விளக்கத்திடல் காண்-பித்து ஜெயின் சொட்டு நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் காளீஸ்வரன் விளக்கம் அளித்தார்.தொடர்ந்து வாணவராயர் வேளாண்மை கல்லுா-ரியில் பூச்சியில் துறை மற்றும் நோயியல் துறை முனைவர்கள், 'வேளாண், தோட்டக்கலை துறை பயிர்களை தாக்கும் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து' விவசாயிகளுக்கு விளக்-கினர். விவசாயிகளுக்கு சொட்டு நீர் மூலம் உர கரைசல் அளிப்பது குறித்து, செயல் விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த வேளாண்மை பண்ணையம் மாதிரி திடல் குறித்து, டாக்டர் ரவிக்குமார் விவ-சாயிகளுக்கு விளக்கமளித்தார். கண்டுணர்வு சுற்-றுலாவில், 30 விவசாயிகள் பயனடைந்தனர்.
ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சோனியா, உதவி தொழில் நுட்ப மேலாளர் பிர-பாகரன் மற்றும் மதன் குமார் செய்திருந்தனர்.
