/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ. 65.54 கோடியில் உள் கட்டமைப்பு பணி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்
/
ரூ. 65.54 கோடியில் உள் கட்டமைப்பு பணி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்
ரூ. 65.54 கோடியில் உள் கட்டமைப்பு பணி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்
ரூ. 65.54 கோடியில் உள் கட்டமைப்பு பணி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்
ADDED : ஜூன் 20, 2025 01:32 AM
கரூர், மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில், 1,580 உட்கட்டமைப்புகள், 65.54 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து பேசியதாவது: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், கடந்த நிதியாண்டில், 742 வீடுகளுக்கு ஒதுக்கீட்டு ஆணை பெறப்பட்டுள்ளது. அதில், 80 சதவீதம் பணிகள் முடிவுற்று எஞ்சிய பணிகள் நடந்து வருகின்றன. ஊரக பகுதிகளில் வீடுகள் பராமரிப்பு திட்டத்தின் கீழ், 2024--2025ம் ஆண்டில், 2,936 வீடுகளுக்கு மராமத்து பணி முடிந்துள்ளது. முதல்வரின் வீடுகள் மறுகட்டமைப்பு திட்டத்தின் கீழ், 171 வீடுகளுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி துறை மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்- கீழ், 8 ஊராட்சி ஒன்றியங்களில், கடந்த நான்கு ஆண்டுகளில், 157 பஞ்., நீர் நிலைகளை புனரமைத்தல், சாலை பணிகள் உள்ளிட்ட, 1,580 உட்கட்டமைப்புகள், 65.54 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில், கலெக்டர் தங்கவேல், டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா
உள்பட பலர் பங்கேற்றனர்.