ADDED : ஜூன் 19, 2026 05:45 AM

அரவக்குறிச்சி:சின்னதாராபுரத்தில், மகளிர் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வராத நிலையில் உள்ளது.
க.பரமத்தி
ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சின்னதாராபுரம் ஊராட்சியின்
நேரு நகர் பகுதியில் மகளிர் பயன்பாட்டிற்காக, 3 ஆண்டுகளுக்கு முன்பு
மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தற்போது பயன்பாட்டிற்கு
வராமல் பாழடைந்துள்ளது. நீண்ட காலமாக பராமரிப்பின்றி இருப்பதால்
மரம், செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் பயன்படுத்த
முடியாத நிலை உருவாகியுள்ளது.
மேலும், இரண்டாவது மானிய குழுவின் கீழ், ரூ.2 லட்சம் மதிப்பில் பழுது நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும்,
தற்போது
அந்த வளாகம் மீண்டும் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. நேரு நகர்
பகுதியில் வசிக்கும் மக்கள், அடிப்படை தேவையான சுகாதார வசதி
இல்லாததால் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட
துறை அலுவலர்களிடம், பலமுறை இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும்
நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மகளிர் சுகாதார வளாகத்தை முழுமையாக
புதுப்பித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
