/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்
/
கரூரில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்
ADDED : அக் 21, 2025 01:27 AM
கரூர், தீபாவளி பண்டிகை, கரூரில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். இப்பண்டிகை ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியிலோ அல்லது அமாவாசை தினத்தன்றோ வருகிறது. தீபாவளி பண்டிகையை ஹிந்துக்கள் மட்டுமின்றி, சமணம், புத்த மதம் மற்றும் சீக்கிய மதத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.
நரகாசுரனை கிருஷ்ணன் அழித்த நாளாக நினைத்து, ஹிந்துக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தீபாவளியன்று மக்கள் அதிகாலை எழுந்து, உச்சந்தலையில் எண்ணெய் இட்டு, வெந்நீரில் குளிக்கின்றனர். இந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால், கங்கை நதியில் குளித்த பலன் கிடைக்கும் என்று ஹிந்து மக்களால் நம்பப்படுகிறது.
இதன்படி, தீபாவளி பண்டிகை கரூரில் நேற்று சிறப்பாக கொண்டாப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் காலையில் எண்ணெய் தேய்த்து புத்தாடை அணிந்து, விதவித இனிப்பு பலகாரங்களை பூஜை அறையில் வைத்து கடவுளை வணங்கினர். பின், தீமை அழிந்த நாளை கொண்டாடும் விதமாக தீபாவளி நாளில் பட்டாசு வெடித்தனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விதவிதமான பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ச்சியடைந்தனர். ஒருவருக்கு ஒருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.