ADDED : மார் 23, 2026 02:51 AM

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தனியார் மஹாலில், தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமை வகித்து பேசியதாவது:
கரூர் மாவட்டத்தில், 'தாயுமானவர்' திட்டம் மூலம், 28,694 முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், ஐந்து ஆண்டுகளில், 59,108 இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சி, 1,140 கோடி ரூபாய் வளர்ச்சி திட்ட செயல்படுத்தப்-பட்டுள்ளது. கரூர் தொகுதியில், 12 பஞ்.,களில், 200 கோடி ரூபாய் திட்-டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில், 5,000 கோடி ரூபாய் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்-படி பல்வேறு திட்டங்கள் வாயிலாக மக்கள் பயன்பெற்று வரு-கின்றனர். மேலும், தமிழகத்தில் தொடர்ந்து மத்திய அரசு வஞ்-சித்து வருகின்றது. அ.தி.மு.க.,வை பயன்படுத்தி, தமிழகத்தில் ஆட்சியமைக்க, பா.ஜ., முயற்சி செய்கிறது. அது ஒரு போதும் நடக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
