/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாலியல் தொல்லை வழக்கில் கைதானவர் தி.மு.க., நிர்வாகி
/
பாலியல் தொல்லை வழக்கில் கைதானவர் தி.மு.க., நிர்வாகி
பாலியல் தொல்லை வழக்கில் கைதானவர் தி.மு.க., நிர்வாகி
பாலியல் தொல்லை வழக்கில் கைதானவர் தி.மு.க., நிர்வாகி
ADDED : ஆக 21, 2024 02:57 AM
கரூர்:இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதானவர், தி.மு.க., நிர்வாகி என பா.ஜ., ஊடக பிரிவு அம்பலப்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் பகுதியை சேர்ந்த, கோபால் மகன் சிலம்பரசன்,33; விவசாயி. இவர், அதே பகுதியை சேர்ந்த, 28 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏழு மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, இளம்பெண் கொடுத்த புகாரின் படி, சிலம்பரசனை கரூர் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கடந்த, 17 ல் சிலம்பரசன் கைது செய்யப்பட்ட நிலையில், பா.ஜ., கரூர் மாவட்ட ஊடக பிரிவினர், அவரை, தி.மு.க., நிர்வாகி என்று அம்பலப்படுத்தி உள்ளனர். பா.ஜ., கரூர் மாவட்ட ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தன் பதிவில், தி.மு.க., கரூர் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளராக சிலம்பரசன் இருந்து வருகிறார்.
இவர், தி.மு.க., நிர்வாகியா? விவசாயியா? என, அவரது பேஸ் புக் பக்கத்தை ஸ்கிரீன் ஷாட் உடன் பதிவிட்டுள்ளார். அதில், சிலம்பரசன், முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில்பாலாஜியுடன் இருக்கும் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. பல்வேறு வழக்கில், பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டால், அதனை சமூக வலை தளத்தில், தி.மு.க.,வினர் டிரண்ட் செய்து வருவதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த பதிவு இருக்கிறது.