தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் கரூரில் தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி

காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் கரூரில் தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி

காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் கரூரில் தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி


ADDED : ஏப் 17, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் :''ஒன்றாம் வகுப்பு முதல், 5 ம்வகுப்பு வரை படிக்கும், 19 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டது. கூடுதலாக, 15 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில், முதல்வரின் காலை உணவு திட்டம், 8ம் வகுப்பு வரை விரிவு

படுத்தப்படும்,'' என, கரூர் தி.மு.க., வேட்பாளர் ஆசி.தியாகராஜன் தெரிவித்தார்.

கரூர் தொகுதியில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், தி.மு.க., வேட்பாளர் ஆசி.தியாகராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, கரூர் தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி இருகிறார். சுரூர் மாநகராட்சி திருமாநிலையூர், சாலைபுதுார், செல்லாண்டிபாளையம், சுக்காலியூர் வரை, 4.20 கி.மீ., துாரத்திற்கு, 10 கோடி ரூபாய் மதிப்பில் சாலையை அகலப்படுத்தி, வடிகால் அமைத்து வண்ண கற்கள் பதிக்கும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டு குடிநீர் திட்டம்

கரூர் மாநகராட்சியில், 68.40 கோடி ரூபாய் மதிப்பில், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் முடிக்கப்பட்டு, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியில், 2021 முதல் 209.819 கி.மீ.,க்கு மேல் சாலை, 155.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட முதல்வர் படைப்பகம் திறக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய திட்டம்

கரூர் சுங்ககேட்டில், கலை பண்பாட்டுத் துறை சார்பில், 1.78 கோடி மதிப்பில், 5,369 சதுர அடி பரப்பளவுடன் கட்டப்பட்டுள்ள, அரசு இசை பள்ளி கட்டடம், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், 61.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், தி.மு.க., தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும். எட்டாவது ஊதியக்குழு அறிக்கையை மத்திய அரசு செயல்படுத்தியதும், அதனை மாநில அரசு ஊழியர்களுக்கு செயல்

படுத்த குழு அமைக்கப்படும்.

அரசு அமைப்புகளில் ஏற்படும், 1 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் கால தாமதமின்றி நிரப்பப்படும். மிகவும் வறுமையில் வாடும், நலிவடைந்த குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வீட்டு வசதி, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு, வங்கிக்கடன் கிடைக்கவும், பல்வேறு உதவிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். வயதானவர்களின் வீடுகளுக்கே சென்று, தாயுமானவர் திட்டத்தின் கீழ், ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

8,000 ரூபாய் கூப்பன்

ஒன்றாம் வகுப்பு முதல் 5 ம்வகுப்பு வரை படிக்கும், 19 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டது. கூடுதலாக, 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதல்வரின் காலை உணவு திட்டம், 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.

வெற்றி பெற்றதும், 8,000 ரூபாய் மதிப்பிலான, கூப்பன் வழங்கப்படும். அதை பயன்படுத்தி வாஷிங் மிஷின், 'டிவி', ப்ரிட்ஜ், மிக்சி மற்றும் மின் அடுப்பு போன்ற வீட்டு உபயோக பொருட்களை, இல்லத்தரசிகள் புதிதாக வாங்கி கொள்ளலாம். மேலும், உங்கள் பகுதிக்கு தேவையான திட்டங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

பிரசாரத்தில், தி.மு.க.,வை சேர்ந்த அசோக்குமார், கரூர் மாநகர செயலர் கனகராஜ் உள்பட கூட்டணி கட்சியினர் பலர்

பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us