தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கோவில் பதவியை ராஜினாமா செய்த தி.மு.க., வேட்பாளர்

 கோவில் பதவியை ராஜினாமா செய்த தி.மு.க., வேட்பாளர்

 கோவில் பதவியை ராஜினாமா செய்த தி.மு.க., வேட்பாளர்


ADDED : ஏப் 07, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர், தான்தோன்றிமலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவியை, தி.மு.க., வேட்பாளர் ராஜினாமா செய்துள்ளார்.

கரூர், தி.மு.க., வேட்பாளராக ஆசி. தியாகராஜன் போட்டியிடுகிறார். இவர், கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவராக இருந்தார்.

'அறங்காவலர் குழுவில் இருந்து, அரசியல் சார்பு கொண்ட நபராக இருக்கும் தியாகராஜனை நீக்க வேண்டும்' என, அக்கோவில் உதவி கமிஷனர் ராஜேஸ்வரிக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விபரங்களை மேற்கோள் காட்டி, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் மனு அனுப்பினார்.

இதையடுத்து, 'தற்போது தியாகராஜன், அறங்காவலர் உறுப்பினர் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்' என, ராம ரவிகுமாருக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், கோவில் உதவி கமிஷனர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us