ADDED : மே 17, 2026 05:01 AM

கரூர் கரூரில் உள்ள மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், நேற்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்விக்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளவும், கட்சியில் சீரமைப்பு நடவடிக்கை எடுக்கவும், கட்சி தலைவர் ஸ்டாலின் உத்தரவின்படி, கள ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், 36 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர், நாளை முதல் நான்கு நாட்கள், மாவட்ட செயலர், தொகுதி பார்வையாளர், வேட்பாளர், தொகுதிக்குட்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை தனித்தனியாக சந்தித்து பேசுவர். அதோடு மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலர்களையும் தனித்தனியே சந்தித்து கருத்துகளை கேட்க உள்ளனர். இது தொடர்பாக, நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.
கூட்டத்தில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோவன், குளித்தலை எம்.எல்.ஏ., சந்திரன் உள்பட பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
