தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நீச்சல் பழக சென்ற தி.மு.க., நிர்வாகி மகன் பலி

நீச்சல் பழக சென்ற தி.மு.க., நிர்வாகி மகன் பலி

நீச்சல் பழக சென்ற தி.மு.க., நிர்வாகி மகன் பலி


ADDED : மே 24, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 05:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் அருகே நீச்சல் பழக சென்ற, தி.மு.க., நிர்வாகியின் மகன், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கரூர், வடக்கு காந்திகிராமம் தின்னப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 48; கரூர் மத்திய கிழக்கு பகுதி தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர். இவரது மகன் சரண்ஜித் நிகில், 18; கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், பி.இ., அனிமேஷன் பிரிவில், முதலாமாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சரண்ஜித் நிகில், நண்பர்கள் சிலருடன் கரூர் அருகே கோவிந்தம்பாளையத்தில் உள்ள, சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில், நீச்சல் பழக சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக சரண்ஜித் நிகில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு வீரர்கள் சரண்ஜித் நிகில் உடலை, கிணற்றில் இருந்து கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us