/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தே.மு.தி.க., கடவூர் தெற்கு ஒன்றிய ஓட்டுச்சாவடி முகவர் கூட்டம்
/
தே.மு.தி.க., கடவூர் தெற்கு ஒன்றிய ஓட்டுச்சாவடி முகவர் கூட்டம்
தே.மு.தி.க., கடவூர் தெற்கு ஒன்றிய ஓட்டுச்சாவடி முகவர் கூட்டம்
தே.மு.தி.க., கடவூர் தெற்கு ஒன்றிய ஓட்டுச்சாவடி முகவர் கூட்டம்
ADDED : அக் 26, 2025 12:56 AM
கரூர், கரூர் மாவட்டம், பாலவிடுதியில், தே.மு.தி.க., கடவூர் தெற்கு ஒன்றிய ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். கரூர் புறநகர் மாவட்ட செயலர் சிவம் ராஜேந்திரன் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கட்சி உறுப்பினர் சேர்க்கை அட்டை மற்றும் புதிய பொறுப்பாளர்களுக்கு பதவி வழங்கப்பட்டது. அதில், மாவட்ட இளைஞரணி துணை செயலராக ரத்தினக்குமார், பாலகிருஷ்ணன், சக்திவேல் உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் ராஜசேகர், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மனோகர், சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.