/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
30 சதவீத உறுப்பினர்களை சேர்க்க தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம்
/
30 சதவீத உறுப்பினர்களை சேர்க்க தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம்
30 சதவீத உறுப்பினர்களை சேர்க்க தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம்
30 சதவீத உறுப்பினர்களை சேர்க்க தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம்
ADDED : ஜூன் 14, 2025 07:38 AM
கரூர்: தேர்தலுக்கு முன், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் புதிதாக, 30 சதவீத உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என, தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூரில் உள்ள தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில், செயற்குழுக்கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் செந்தில்பாலாஜி பங்கேற்று, வரும், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியினருக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.
மாவட்டத்தில் உள்ள, நான்கு தொகுதிகளிலும் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், 30 சதவீதம் புதிய உறுப்பினர்களை கட்சியினர் சேர்க்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கைக்கு செல்லும் பூத் கமிட்டியினர், ஒவ்வொரு வீட்டிலும், 10 நிமிடமாவது செலவிட வேண்டும். உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடும் நிர்வாகிகள் அரசின் சாதனைகளையும், வீட்டில் ஒருவர் அரசு நலத்திட்டங்களில் பயனடைந்துள்ளதை நினைவுப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்கோ, மாநகர செயலர் கனகராஜ், மாநகர பகுதி செயலர்கள் ராஜா, குமார், ஜோதிபாசு, ஒன்றிய செயலர்கள் வேலுசாமி, முத்துக்குமார், பாஸ்கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.