/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
கரூரில் தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 20, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், டிச. 20-
கரூர், ஜவகர்பஜாரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன், மாவட்ட தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு, அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என, கட்சியினர் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, மாணிக்கம், மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர்கள் கனகராஜ், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.