ADDED : மே 17, 2026 05:04 AM
அ நிறம் | அளவு
கரூர் :கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் மனோகரா ரவுண்டானா அருகே, மாவட்ட தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
இதில், மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவை வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, மாநகர செயலர் கனகராஜ், பகுதி செயலர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
