ADDED : பிப் 15, 2026 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: மகளிர் உரிமைத்தொகை, 5,000 ரூபாயை வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளதை கொண்டாடும் வகையில், கிருஷ்ணராய-புரம் பஸ் ஸ்டாப் பகுதியில் மக்களுக்கு லட்டு வழங்கி தி.மு.க.,வினர் கொண்டாடினர். கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். மேலும் தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்படும் நல்ல திட்டங்கள் பற்றி, மக்களுக்கு எடுத்து கூற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி, நகர தி.மு.க., செயலாளர் சசிக்குமார், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்-றிய செயலாளர் ரவிராஜா மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உள்-பட பலர் கலந்து கொண்டனர்.

