தொகுதி மறுவரையறைக்கு எதிராக தி.மு.க., ஆர்ப்பாட்டம்
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 17, 2026 06:01 AM
அ நிறம் | அளவு
கரூர் : கரூர் தி.மு.க., அலுவலகம் முன், தொகுதி மறுவரையறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். தொகுதி மறுவரையறை திட்ட நகலை எரித்து போராட்டம் நடத்தினர்.
தொகுதி மறுவரையறை என்ற பெயரில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை பா.ஜ., அரசு வஞ்சிக்கிறது. மாநிலங்களின் உரிமைகளை பறிக்க கூடாது என தி.மு.க.,வினர் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, தி.மு.க., கரூர் வேட்பாளர் தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் வேட்பாளர் ராஜா, கரூர் மாநகர செயலர் கனகராஜ், கரூர் மாநகர பகுதி செயலர்கள் ராஜா, குமார், ஜோதிபாசு உள்பட பலர் பங்கேற்றனர்.
