ADDED : பிப் 13, 2026 07:50 AM
அ நிறம் | அளவு
கரூர்: கரூர் ஜவகர் பஜாரில் உள்ள தலைமை தபால்நிலையம் முன், மத்திய அரசை கண்டித்து, தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலர் கனகராஜ் தலைமை வகித்தார். மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும், 100 நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகளுக்கு எதிரான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.,வை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், கரூர் மாநகராட்சி துணை மேயர் சரணவன், மண்டல தலைவர்கள் ராஜா, அன்பரசன், சக்திவேல், பகுதி செயலர் குமார், ஜோதிபாசு உள்பட பலர் பங்கேற்றனர்.
