/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தோகைமலையில் தி.மு.க., பொதுக்கூட்டம்
/
தோகைமலையில் தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : ஏப் 14, 2025 07:07 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த தோகை மலை பஸ் ஸ்டாண்டில், சட்டசபை தொகுதி, தி.மு.க., இளைஞரணி சார்பில், மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பேசியதாவது: தமிழகத்தில், 'வெல்வோம் 200; படைப்போம் வரலாறு' என்பது முதல்வரின் இலக்கு. அந்த, 200 தொகுதியில் குளித்தலை முதல் தொகுதியாக இடம் பெற்றுள்ளது. நம் மாவட்டத்திற்கு என்ன தேவை என்பதை நீங்களே எடுத்துச் சொல்லுங்கள், நாங்கள் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிறைவேற்றி தருகிறோம். குளித்தலை தொகுதிக்கு மினி விளையாட்டு அரங்கம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, அய்யர்மலை அரசு கலை கல்லுாரி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது. குளித்தலை தொகுதியில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல்வரின் கரங்களில் ஒப்படைக்க வேண்டும். அதற்கு இளைஞர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

