/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தி.மு.க., முப்பெரும் விழா: பிரமாண்ட மேடை தயார்
/
தி.மு.க., முப்பெரும் விழா: பிரமாண்ட மேடை தயார்
ADDED : செப் 17, 2025 02:09 AM
கரூர் :கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவை முன்னிட்டு, பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள், ஈ.வெ.ரா, பிறந்த நாள், தி.மு.க., தொடக்க நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக, செப்.,17ல் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கரூரில் நடக்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்பட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக, கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோடங்கிபட்டி பிரிவு சாலை அருகில், தி.மு.க., முப்பெரும் விழா நடக்கும் இடத்தில் கால்கோள் நடும் நிகழ்ச்சி கடந்த, 3ம் தேதி நடந்தது. தொடர்ந்து விழா நடக்கும் இடத்தில் மேடை, பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடந்தது.
மாநிலம் முழுவதும் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை கருத்தில் கொண்டு, விழா தளத்தில் ஒரு லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து வசதி, கார் பார்க்கிங், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் மிகுந்த நுணுக்கத்துடன் திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மைதானத்தில் இதுவரை இல்லாத அளவில், 50 ஏக்கர் நிலத்தில், விழா மேடையானது, 60 அடி அகலத்தில், 200 அடி நீளத்தில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேர் அமர்வதற்கு இருக்கை
கள் போடப்பட்டுள்ளன. இளைஞர் அணி நிர்வாகிகள் ஒரே மாதிரியான டீ சர்ட் சீருடையிலும், இளம்பெண்கள் ஒரே மாதிரியான சுடிதார் உடையிலும், பெண்கள் ஒரே மாதிரியான புடவையிலும், ஆண்கள் ஒரே மாதிரியான கட்சி வேட்டி சட்டையிலும் கலந்து கொள்கின்றனர்.
2,700 போலீசார் பாதுகாப்பு
கரூரில், தி.மு.க., சார்பில் இன்று நடக்கவுள்ள, முப்பெரும் விழாவுக்காக, 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தி.மு.க., நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான அண்ணாதுரையின், 117 வது பிறந்த நாளையொட்டி, கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று மாலை, 5:00 மணிக்கு முப்பெரும் விழா நடக்கிறது. விழாவில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். அதையொட்டி, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., ஜோஷி நிர்மல் குமார் தலைமையில், ஒரு டி.ஐ.ஜி., 11 எஸ்.பி.,க்கள், ஒன்பது ஏ.டி.எஸ்.பி.,க்கள், 29 டி.எஸ்.பி.,க்கள், 42 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட, 2,700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.