/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓ.டி.பி., வங்கி கணக்கு எண்களை பகிர வேண்டாம்; கரூர் கலெக்டர் எச்சரிக்கை
/
ஓ.டி.பி., வங்கி கணக்கு எண்களை பகிர வேண்டாம்; கரூர் கலெக்டர் எச்சரிக்கை
ஓ.டி.பி., வங்கி கணக்கு எண்களை பகிர வேண்டாம்; கரூர் கலெக்டர் எச்சரிக்கை
ஓ.டி.பி., வங்கி கணக்கு எண்களை பகிர வேண்டாம்; கரூர் கலெக்டர் எச்சரிக்கை
ADDED : பிப் 11, 2025 07:23 AM
கரூர்: ''பொதுமக்கள் தங்களுடைய, மொபைல் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி., ஆதார், பான், வங்கிக் கணக்கு விபரங்களை தேவையில்-லாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளில் பகிரக்கூடாது,'' என, கலெக்டர் தங்கவேல் பேசினார்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தேசிய பாதுகாப்பான இணைய தினத்தை முன்னிட்டு
அனைத்து அரசு துறை அலுவ-லர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் தங்கவேல்
பேசியதாவது:இணைய பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாளுக்கு நாள் இணையவழி
குற்றங்களும் அதிகரிக்கிறது. பொது-மக்கள் தங்களுடைய கைபேசி எண்ணிற்கு வரும், ஓ.டி.பி.,
ஆதார், பான், வங்கி கணக்கு விபரங்களை தேவையில்லாத எண்களிலிருந்து வரும்
அழைப்புகளில் பகிரக்கூடாது. ஆதார-மற்ற ஆதார் பணம் பரிவர்த்தனை அறிவிப்பு பற்றி கவனமாக
இருக்க வேண்டும். கே.ஒய்.சி., புதுப்பிப்பு என்ற பெயரில், வங்கி கணக்கு விபரங்களை உங்களுக்கு
தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் உள்ள இணைப்பை கிளிக் செய்ய
வேண்டாம்.வலைதளங்களில் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம். அதிகம் லாபத்தை
கொடுக்கும் ஆன்லைன் முத-லீட்டு பரிந்துரைகளில் நம்பிக்கை வைக்க வேண்டாம். மொபைல் உள்ள
செயலிகளை, குறிப்பிட்ட கால இடைவெளி-களில் மதிப்பாய்வு செய்து தேவை இல்லாமல் வழங்கிய
அனும-திகளையும், நீண்ட நாட்களாக பயன்படுத்தாத செயலிகளையும் உடனடியாக நீக்கி விட
வேண்டும். எந்தவொரு அரசாங்க நிறுவ-னமும் வீடியோ அல்லது குரல் அழைப்புகளின் மூலம்
உங்-களை விசாரணை செய்யவோ, கைது செய்யவோ முடியாது. மேலும், பொது இடங்களில் உள்ள
வைபை பயன்படுத்தி, முக்-கியமான தகவல்களை பரிமாறுதல் மற்றும் பணம்
பரிவர்த்த-னைகளை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.கூட்டத்தில், தேசிய தகவல் மைய மாவட்ட அலுவலர் கண்ணன், உதவி ஆணையர் (கலால் )
கருணாகரன், கலெக்டர் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பச்சமுத்து உள்பட பலர்
பங்கேற்றனர்.

