ADDED : செப் 29, 2026 05:51 AM

கரூர்; திருவள்ளூர் மாவட்டம், நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஹரிதா, 29; இவருக்கும், கரூர் ஏமூரை சேர்ந்த நவீன், 30, என்பவருக்கும் கடந்த, 2021ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு, மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. திரும-ணத்தின்போது, ஹரிதா குடும்பத்தினர், 115 பவுன் தங்க நகை, கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். மேலும், பெண் குழந்தை பிறந்-தபோது, 15 பவுன் தங்க நகை கொடுத்தனர்.
இந்நிலையில், 200 பவுன் தங்க நகை கேட்டு, நவீன் மற்றும் அவரது குடும்பத்தினர், ஹரி-தாவை அடித்து உதைத்துள்ளனர். இதுகுறித்து, ஹரிதா மகளிர் போலீசில் புகார் செய்தார். இதை-யடுத்து, ஹரிதாவின் கணவர் நவீன், அவரது தாய் வசந்தி, 51, சகோதரர் ஜவஹர், 28, தந்தை சவுந்திரராஜன், 55, ஆகியோர் மீது, கரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா வழக்-குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.
