டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு வரவேற்பு
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு வரவேற்பு
ADDED : செப் 08, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
குளித்தலை; குளித்தலை அடுத்த தோகைமலை ஊராட்சி ஒன்-றியம், கூடலுார் பஞ்., பேரூர் உடையாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலிங்கம். இவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்-றுள்ளார்.
நல்லாசியர் விருது பெற்ற இவருக்கு, பேரூர் பஸ் ஸ்டாண்டில் முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் மாலை, சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மேளதாளங்களுடன் பட்டாசு வெடித்து ஊர்வலமாக பள்ளிக்கு வந்தார். பள்-ளியில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது. வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு, தலைமையாசி-ரியர் ராஜலிங்கம் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்-சியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பொன்னம்பலம், முன்னாள் பஞ்., தலைவர் அடைக்கலம், ஊர் முக்கியஸ்தர்கள் நடராஜன், கோபால், ஸ்டீபன், சரவணன் மற்றும் பலர் வாழ்த்தி பேசினர்.
