/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புன்னம்சத்திரம் சாலையில் வடிகால் வசதி அவசியம்
/
புன்னம்சத்திரம் சாலையில் வடிகால் வசதி அவசியம்
ADDED : நவ 29, 2024 01:18 AM
புன்னம்சத்திரம் சாலையில்
வடிகால் வசதி அவசியம்
க.பரமத்தி, நவ. 29-
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம்சத்திரம் கடை வீதியில், பஞ்., அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், மின்வாரிய அலுவலகம், வங்கி போன்றவற்றிக்கு மக்கள் வந்து செல்கின்றனர். கரூர், கொடுமுடி, ஈரோடு போன்ற ஊர்களுக்கு பஸ்களில் ஏறி செல்லவும் வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு இரு புறங்களிலும் மழைநீர் வடிகால் வசதி அமைக்கப்பட்டது.
தற்போது ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, மழை காலங்களில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. மழை நீர் சாலையோரம் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் தேவையான வடிகால் வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

