ADDED : மார் 16, 2024 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர்
லைட் ஹவுஸ் கார்னர் அருகே, படிக்கட்டு துறை பகுதியில், சாக்கடை கால்வாய்
செல்கிறது.
இதை சுற்றியுள்ள பகுதியில், 300 க்கும் மேற்பட்ட
குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில் சாக்கடை கால்வாயில், பிளாஸ்டிக்
கழிவுகள், குப்பை அதிகளவில் தேங்கியுள்ளது. மண் மேடுகளும் ஏற்பட்டுள்ளதால்,
கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும், மழைக் காலங்களில்
மழைநீர், சாலையில் செல்லும் நிலை ஏற்படும். இதனால் ஏற்படும் சுகாதார கேட்டை
தடுக்க, படிக்கட்டுதுறை பகுதியில் செல்லும், கால்வாயை துார்வாரி
தேங்கியுள்ள கழிவு பொருட்களை அகற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.

