/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பூமி பூஜை செய்தும் கிடப்பில் வடிகால் பணி
/
பூமி பூஜை செய்தும் கிடப்பில் வடிகால் பணி
ADDED : டிச 07, 2025 04:29 AM
கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சணப்பிரட்டி அருகே, எஸ்.வெள்ளாளப்பட்டி வடக்கு-தெற்கு சாலையில், 24 லட்சம் ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் பணிக்கு பூமி பூஜை நடந்தது. இதுவரை, பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாய் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இதனால், அப்பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வாய்க்காலில் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தற்போது மழைபெய்யும் போது சாலையில் கழிவுநீர் கலந்து ஓடுகிறது. அதில், பொதுமக்கள் நடந்து செல்வதால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

