தொற்று நோய் பரப்பும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
தொற்று நோய் பரப்பும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
ADDED : ஜூன் 01, 2026 03:45 AM

கரூர்:கரூர்
பழைய பஸ் ஸ்டாண்டில், பல மாதங்களாக குடிநீர் சுத்திகரிப்பு
இயந்திரம் தொற்றுநோய் பரப்பும் நிலையில், சேதமடைந்த நிலையில்
உள்ளது. அதை சரி செய்ய வேண்டும் என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்
பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நலனுக்காக, அ.தி.மு.க., ஆட்சியில்
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வைக்கப்பட்டது. அதன் மூலம்,
பயணிகள் நல்ல குடிநீரை அருந்தினர். தற்போது, சுத்திகரிப்பு
இயந்திரம் பல மாதங்களாக, தொற்று நோய் பரப்பும் வகையில்,
சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும்,சுத்திகரிப்பு
இயந்திரத்தில் உள்ள குழாய்கள் பழுதடைந்துள்ளது. அதை, மாநகராட்சி
நிர்வாகம் சரி செய்யாமல் விட்டு விட்டது.
கடந்த, 2021ல் தி.மு.க.,
ஆட்சி ஏற்பட்ட பிறகு, பழைய பஸ் ஸ்டாண்டில் அம்மா குடிநீர் நிலையமும்
மூடப்பட்டது. இதனால், பயணிகள் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள, கடைகளில்
ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை, 20 முதல் 25 ரூபாய் வரை விலை கொடுத்து
வாங்குகின்றனர். எனவே, கரூர் பழைய பஸ் ஸ்டாண்டில் சேதம் அடைந்துள்ள
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சரி செய்து, துாய்மையான
முறையில் வைத்திருக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க
வேண்டியது அவசியம்.
