/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த டிரைவர் பலி
/
கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த டிரைவர் பலி
ADDED : ஆக 30, 2025 01:44 AM
கோபி, கோபி அருகே, கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்து டிரைவர் உயிரிழந்தார்.
கோபி அருகே சுட்டிக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் மேகபிரபு, 36. தனியார் நிறுவன டிரைவர்; இன்னும் திருமணமாகவில்லை. இவர் கோபி அருகே, ஆண்டிபாளையம் என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் பாலத்தில் அமர்ந்து, நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு போன் பேசி கொண்டிருந்தார்.
அப்போது தடுமாறி வாய்க்காலில் தவறி விழுந்தார். இவரது உடல் நேற்று காலை, 6:00 மணிக்கு இறந்த நிலையில் மீட்கப்பட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரின் சகோதரர் கலைவாணன், 39, கொடுத்த புகார்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.